முழுநேர அரசு ஊழியர்களாக்கி அங்கன் வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க புதுக் கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க புதுக்கோட்டை மாவட்ட 3 ஆவது மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் புதுக்கோட்டையில் நடை பெற்றது.
இதற்கு மாவட்ட துணைத் தலைவர் பி. சந்திரா தலைமை வகித்தார். டிபத்மா அஞ் சலி தீர்மானம் வாசித்தார். எம்.தனலெட்சுமி, ஆர்.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் ஏ. ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.பச்சையம்மாள், பொருளாளர் கே. மல்லிகா ஆகியோர் அறிக்கைகளை முன் மொழிந்தனர். மாநாட்டில் கலந்துகொண்டு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.