வடமதுரையில் மின்தடை நாளில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை துண்டிக்கப்படுவதால் 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வடமதுரையில் முதன்முதலில் அலைபேசி சேவையை வழங்கியது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இதனால் இப்பகுதியில் நீண்ட காலமாக பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துவோர் அதிகம்.தற்போது கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பின் மூலமே பயின்று வருகின்றனர். வடமதுரையில் மின்தடை நாளில் பி.எஸ்.என்.எல்., சேவை தடைபடுவதால் மாணவர்களால் ஆன்லைன் வகுப்பில் தொடர முடியாத நிலையும், அலைபேசியில் பேசவோ, அழைப்புகளை பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கூறுகையில்,''மின்தடை நாளில் மின்சப்ளைக்காக ஜெனரேட்டர் வசதி இருந்தும் பயன்பாடின்றி உள்ளது. இதனால் சேவையில் ஏற்படும் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தனியார் சேவைக்கு மாறும் நிலை உள்ளது'' என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.