'மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதால் விரைவில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும்'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப பள்ளி மாணவர்களின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முதலில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் இப்பள்ளிகள் திறப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
கிராம பகுதி ஆரம்ப பள்ளிகளில் மாணவர் நெருக்கடி குறைவாக உள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றினால் தொற்று அபாயம் ஏற்படாது. மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளை சுழற்சி முறையில் செயல்படுத்த வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 2021 ஜன.1 முதல் 11 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்திட வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.