தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அமலான ஊரடங்கு தளர்வுகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அரசு கலை கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.