கரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்யும் முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பதிவு செய்யும் முறையை மிகவும் எளிமையாக்கும் விதமாக ‘வாட்ஸ்ஆப்’பில் மூலம் முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கரோனா உதவி மைய எண்ணிற்கு (http://wa.me/919013151515) வாட்ஸ்ஆப் மூலம் ‘Book Slot’ என்று அனுப்பினால், உங்கள் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.