இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும் பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும் பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏன்?

நடப்பு பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்தில் பெண்ணாகரம் தொகுதி ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: இந்திய அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, சிகிச்சை முறை அளிப்பது, உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுத்த முதல்வர்களின் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் இடம். பாமகவின் 41 ஆண்டுகால போராட்டம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு. சமூக நீதி போராட்டத்தின் தொடர்ச்சியாக, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் நிறைவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார். சட்டமன்றத்தில் நாங்களும் கேட்டோம். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி அவர் நல்ல முடிவு எடுத்துள்ளதை மனதார பாராட்டுகிறேன். கேரளா, ஆந்திராவை போன்று எல்லா சமூக மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தொகுப்பு இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

100 நாட்களில் வரவு செலவு திட்ட அறிக்கையில் பார்க்கும் நேரத்தில் நெருக்கடியான சூழல் தெரிகிறது. வருவாயை பெருக்க வழி இருக்கிறதா என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்வி தான். வரிவருவாய் வசூலிக்க மாநிலங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. வரியில்லாமல் வரவு செலவு போட்டிருக்கிறீர்கள். இப்போது பெட்ரோல், டீசல் வரி, வாகன வரி, பத்திரப்பதிவு கட்டணம் மூலம் வருவாய் தான். எனவே வருவாயை பெருக்க வழிவகை செய்ய வேண்டும். தாது மணல் மூலம் வருவாய், வெளிநாடுகளில் இருந்து வருவாய் பெருக்க வேண்டும். 69 பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்வதன் மூலம் லாபமடைய வழிவகுக்கும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32599 கோடி ஆகும். இடைக்கால பட்ஜெட்டில் ரூ.34,161 கோடி ஆகும். இடைக்கால பட்ஜெட்டை விட நிதி குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி:

இந்த பட்ஜெட் என்பது 6 மாத காலத்துக்கு தான். அகவிலைப்படி அடுத்தாண்டுக்கு ஒத்தி வைத்துள்ளோம். எனவே, அந்த தொகை மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி வரும். அதை சேர்த்தாலே ரூ.35 ஆயிரம் கோடி வரும். இன்னும் 2 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்குகிறேன் பாருங்கள் என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் கூறியுள்ளார். அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம். அரசு பள்ளிகள் நவீன (மாடல்) பள்ளிகளாக மாற்றப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews