நல்லாசிரியர் விருதுக்கான நேர்முகதேர்வுக்கு அழைப்பு இல்லை: ஆசிரியர்கள் அதிருப்தி
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரிகள் நேர்காணலுக்கு அழைக்காததால், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
செப்.5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுகளுக்கான தேர்வாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புத்துார், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்தனர்.
பிற மாவட்டங்களில் நல்லாசிரியர் விருதுக்காக விண்ணப்பித்த ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. மாவட்ட கல்வி அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தாதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறுகையில்;
நேர்முகத்தேர்வு நடத்த வேண்டியதில்லை. கொரோனா காரணமாக, கூட்டங்களை தவிர்க்க வேண்டியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மூத்த வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டவர்கள் கொண்ட கமிட்டி அமைத்து விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பி வைத்துள்ளோம். என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.