லோகோ டிசைனிங் படிப்பும், வழிகாட்டுதலும்...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

லோகோ டிசைனிங் படிப்பும், வழிகாட்டுதலும்...!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கவனம், இப்போது 'லோகோ டிசைனிங்' துறை பக்கம் திரும்பி இருக்கிறது.
நிறைய மாணவர்கள், டிசைனிங் துறையில், லோகோ டிசைனிங் கலை சம்பந்தமான படிப்புகளிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். புதுமையான படிப்பு என்பதால், மாணவர்களிடையே நிறைய சந்தேகங்களும் எழு கின்றன. அவை அனைத்திற்கும் தன்னுடைய லோகோ டிசைனிங் அனுபவம் வாயிலாக பதிலளிக்கிறார், அழகிரி கோவிந்தராஜூ. பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந் தவரான இவர், லோகோ டிசைனிங் துறையில் 19 ஆண்டு கள் அனுபவம் மிக்கவர். 2018-ம் ஆண்டு ரஷியா வில் நடந்த விழாவில் சிறந்த லோகோ உருவாக்கத் திற்காக, சர்வதேச விருது வென்றவர். இவர் லோகோ டிசைனிங் துறை பற்றி நிறைய விஷயங் களை பகிர்ந்து கொள்கிறார்.

லோகோ, என்றால் என்ன?
3 மணிநேர திரைப்பட கதையை விளக்க, ஒரு ‘ஒன் லைன்' இருக்கும். அதுபோலவே, 100 ஆண்டு பாரம்பரிய மிக்க வரலாற்றை சொல்ல, சேவைகளை வெளிக்காட்ட, நிறுவனத்தின் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதுவே, லோகோவாக அறியப்படுகிறது.

பிராண்டிங் மற்றும் லோகோ இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?
ஒரு பொருள் மீதான ஈர்ப்பை உருவாக்குவது பிராண்டிங். விளம்பரம் வாயிலாககூட, பிராண்டிங் கலையை நிகழ்த்தலாம். ஆனால் லோகோ என்பது வேறு ரகம். ஒரு நிறுவனத்தை ஒரு முத்திரையின் வாயிலாக அடையாளப்படுத்தி, மக்கள் மனதில் பதியவைக்கவேண்டும். சிந்திக்க வைக்கவேண்டும். அந்த நிறு வனத்தின் முழுக் கதையை சொல்வதாக அது இருக்கவேண்டும்.

லோகோ உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட டிசைன், பேட்டன், வண்ணம்... என எல்லாமே, அந்த நிறுவனத்தின் எண்ணமாக இருக்கவேண்டும்.
லோகோ டிசைனிங் துறை சுலபமானதா?
மிகவும் சுலபமான கலை. மகிழ்ச்சியான வேலை சூழலை உரு வாக்கி கொடுக்கும் துறை. புதுமையாக சிந்திக்க வைக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews