தமிழகத்தில், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 3,500 துவக்கப் பள்ளிகளை உயர், மேல்நிலைப் பள்ளி களுடன் இணைக்கும் முடிவின்படி சத்துணவு மையங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.மேலும், 'சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்' எனவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர் .மதுரையில், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம் கூறியதாவது:கடந்த 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.இதற்காக 2017, 2019ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தற்போதைய அரசு ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 2021 ஜூலை முதல் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.இதன்படி, மாநில அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். கொரோனா தொற்றை காட்டி, பறிக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையை மீண்டும் அறிவிக்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு நிலையம் மூடப்பட்ட வேளையில் ஊழியர்கள் அதே ஊதியத்தை வழங்கும் நிலையை உருவாக்கும் எண்ணம் கொண்டு அதே பள்ளியில் பகுதி நிலை ஆசிரியர் பணி யில் அமர்த்த வேண்டும்.
ReplyDelete