பிடித்தம் செய்த ஓய்வூதியம் ரூ.60 ஆயிரம் கோடி எங்கே? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 31, 2021

1 Comments

பிடித்தம் செய்த ஓய்வூதியம் ரூ.60 ஆயிரம் கோடி எங்கே?

“ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு பிடித் தம் செய்த ரூ.60 ஆயிரம் கோடி தொகை எங்கே போனது' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 2003 ஏப்.1முதல் புதிய ஓய்வூ திய திட்டம் நடைமுறை யில் உள்ளது. இதில் அர சுஊழியர் ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் அகவிலைப்படியில் அரசு 10 சதவீதம் பிடித்தம் செய்கிறது. அரசு சார்பிலும் 10 சதவீதம் பங்க ளிப்பு தொகை செலுத் தப்படுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டு வரை ரூ.60 ஆயிரம் கோடி அள வில் உள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத் தில் (சி.பி.எஸ்.,) இறந்தஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்கா மல் பாதிக்கப்படுகின்ற னர். இத்திட்டத்தில் தமி ழக அரசால் பிடித்தம் செய்த தொகை ரூ.60ஆயி ரம் கோடி எங்கே உள்ளது என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிதி குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும். தேர் தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத் துசெய்து, பழைய திட் டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.

1 comment:

  1. 2003க்குபின் பணியேற்ற அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 10/ அரசு பங்களிப்பு 10/ சேர்ந்த தொகை 50 ஆயிரம் கோடிகாகு மேல் இருக்கும்
    பிடித்த பணம் நிலை என்ன என்று அறிய முடியவில்லை. புதியதாக எந்த கோரிக்கைக்கும் இந்த அரசு செவி சாய்காது

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews