தமிழகத்தில் சிறப்பு மருத்துவம் படித்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – என்ன காரணம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 26, 2021

Comments:0

தமிழகத்தில் சிறப்பு மருத்துவம் படித்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – என்ன காரணம்?

அரசு மருத்துவ கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பை முடித்து அரசு மருத்துவமனைகள் வாரியாக பயிற்சி பெறாத மாணவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம்.

மருத்துவ கல்லூரி மாணவர்கள்:

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உயர் சிறப்பு படிப்புகள் 3 ஆண்டுகள் வரை உள்ளது. மூளை நரம்பியல், குடல், ரத்த நாள, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் உள்பட சிறப்பு படிப்புகள் உள்ளன. டி.எம், எம்.சி ஹெச். படிப்புகளில் ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகு சிறப்பு படிப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது. சிறப்பு படிப்புகளில் சேரும் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவது கட்டாயம். உயர் சிறப்பு மருத்துவ படிப்பை முடித்தவர்கள் காலியிடங்களில் பணியாற்ற விருப்பமின்மை, துறை சார்ந்த காலி பணியிடங்கள் இருந்தும் பணியாற்ற மாணவர்களுக்கு ஆர்வமின்மை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது. ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி சிறப்பு மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கி வருகிறது.

கடந்த ஜூலை 30 ம் தேதி சிறப்பு மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் சிறப்பு மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு மருத்துவ படிப்பு படித்த மாணவர்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறாததும் தெரியவந்தது. அரசு மருத்துவமனைகள் வாரியாக பயிற்சி பெறாத சிறப்பு மருத்துவம் பயின்ற மாணவர்களை பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சி பெறாத, சிறப்பு மருத்துவம் படித்து முடித்த மாணவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews