கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநில அரசு வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 17 முதல் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் நகரங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளியும் அதன் மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துத் திட்டத்தை வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் ஷிப்ட் அல்லது மாற்று நாட்களில் வகுப்புகளை எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 15-20 மாணவர்கள் மட்டுமே வகுப்பில் இருக்க வேண்டும். ஒரு பெஞ்சிற்கு ஒரு மாணவர் என ஒவ்வொருவருக்கும் இடையே ஆறு அடி தூரம் தனிமனித இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.
பள்ளி நேரம் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே. பள்ளிகளில் கலாச்சார அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது. நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும். மேலும் 81% பெற்றோர்கள் கணக்கெடுப்பில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கொரோனா இல்லாத கிராமங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டன எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு மாணவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்பட்டால், மாணவர் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.