நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் – பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 11, 2021

Comments:0

நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் – பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் 75 வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொண்டாட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திரதின விழா:

ஆண்டு தோறும் இந்திய நாட்டின் சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும். வழக்கமாக அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் விடுமுறை நாளாக இருப்பினும் அனைவரும் கொடியேற்றுவதற்கு வருவதற்கு அறிவுறுத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். நடப்பாண்டில் நாட்டின் 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்ப்பட இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல இடங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தரப்பு கல்வி நிறுவனங்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளது. அதன்படி, நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை, பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எளிய முறையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும், தேசிய கொடியேற்ற வேண்டும். கொரோனா தடுப்பில் முன்களப் பணியாளர்களாக இருந்தவர்களை பாராட்டி, அவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு, அதில் இருந்து மீண்டவர்களையும் அழைக்கலாம் என, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படவுள்ளது. இருப்பினும், இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விழா குறித்து புகைப்பட அறிக்கைகள் முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews