இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா டிசம்பர் மாத தேர்விற்கான விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 வரை நீட்டித்துள்ளது.
கால அவகாசம்:
இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள். நடப்பு ஆண்டின் டிசம்பர் மாத தேர்விற்கான விண்ணப்ப பதிவு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் சில நகரங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 24ம் தேதி தேர்வுக்கு வானிலை காரணமாக வர இயலாத மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய அறிவிப்புகள் ஜூலை 30ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சல்கரன்ஜி, கோலாப்பூர், ரத்னகிரி, சாங்லி மற்றும் சதாரா நகரங்களில் நிலவும் மோசமான வானிலை குறித்து ஐசிஏஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் முதல்நிலைத்தேர்வுகளை அங்கு நடத்தும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ICAI CA முதல்நிலை தேர்வுகள் 2021 க்கான விண்ணப்ப பதிவு செயல்முறை ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு icai.org இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.