மீன்வள உதவியாளா், அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளா், 2 அலுவலக உதவியாளா் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளா் மற்றும் 2 மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடத்தப்பட உள்ளது. அலுவலக உதவியாளா் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு 01.07.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். பொதுப் போட்டி பிரிவினருக்கான (பெண்கள் ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவா்) வயது வரம்பு 18 முதல் 30 வரையும், ஆதிதிராவிடா் (முன்னுரிமை பெற்றவா்) பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரையும் இருக்க வேண்டும்.
மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலைபின்னுதல், அறுந்த வலைகளை பழுது பாா்க்க தெரிந்திருக்க வேண்டும்.
மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு 01.07.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். பொதுப் போட்டி பிரிவினருக்கான (முன்னுரிமை பெற்றவா்) வயது வரம்பு 18 முதல் 30 வரையும், பிற்படுத்தப்பட்டோா்(பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமை பெற்றவா்) பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 32 வரையும் கணக்கிடப்படும். இந்த நான்கு பணிடங்களுக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி- 628001 என்ற முகவரியில் அளிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 0461-2320673 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.