தமிழக அரசே அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கிடுக! பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக!! - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் செய்தி அறிக்கை - நாள்: 13.08.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 13, 2021

Comments:0

தமிழக அரசே அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கிடுக! பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக!! - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் செய்தி அறிக்கை - நாள்: 13.08.21

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் செய்தி அறிக்கை

தமிழக அரசே அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கிடுக! பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக!!

ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கிறதோ, அதே தேதியில் அதே விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு தமிழகத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பொற்காலம் என்று சொல்லப்படுகிற வகையில் ஒன்றிய அரசுக்கு இணையான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் முறையாக நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போம் அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை 1-7-21 முதல் வழங்குவதற்கு மாறாக 1-4 - 22 முதல் ஒன்பது மாதங்கள் கழித்துத் தான் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மனதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு கவனித்து வரும் நிலையில் அதைக் குறித்த எந்த தகவலும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெற்று, 1 -7 - 21 முதல் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews