உத்தரபிரதேச மாநில கல்வி வாரியம் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி பள்ளிகளை திறப்பதாக அறிவித்துள்ளது. தவிர மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா தொற்று புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேச அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தன் விழாவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புதிய அறிவிப்பின் படி நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை துவங்க உள்ளது. அதே நேரத்தில் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநில அளவிலான சுகாதார நிபுணர் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் படி, நேற்று (ஆகஸ்ட் 16) இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 50 சதவீத திறனுடன் துவங்கியது. இம்மாணவர்களுக்கு இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேச அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்பட உள்ளது.
முதல் ஷிப்ட் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறும். இரண்டு ஷிப்டுகளிலும், மாணவர்கள் 50 சதவீத திறனுடன் கலந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பெற்றோரின் அனுமதி பெற்ற பின்னரே மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர முடியும். மேலும் அனைத்து மாணவர்களும் பள்ளி வளாகத்துக்குள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.