மேற்படி பொருள் சார்ந்து பகுதிநேரத்தில் நியமனம் செய்யப்பட்ட அடிப்படைப்பணியாளர்களை முறையான பணியமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பணியாளர்களுக்கு அரசளவில் விதித்தளர்வு பெற்று பணிவரன்முறை செய்யவேண்டிய நிலையில் உள்ள பணியாளர்களது பட்டியலை பார்வை 1 யிற் கண்டுள்ள செயல்முறைகள் வாயிலாக கோரிப் பெற்று விதிகளுக்குட்பட்டு அமையப்பெற்ற பணியாளர்களுக்கு சார்ந்த நியமன அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் பணிவரன்முறை செய்ய அறிவுறுத்தியும், அரசளவில் தளர்வு பெற வேண்டிய பணியாளர்கள் சார்ந்து ஒருங்கிணைந்தப் பட்டியல் தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொருளில் ஏனைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் இன்மை அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் சில பணியாளர்களது வழக்கு கோப்புகளை ஆய்வு செய்ததில் பணிவரன்முறைப்படுத்த வழக்கு தொடர்ந்தது கண்டறியப்பட்டு மீளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கோரி பெறப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பார்வை 3 இல் கண்டுள்ள படி அரசால் ஒருங்கிணைந்த பட்டியல் அனுப்பப்பட்ட பின்னர் மீளவும் கருத்துரு அனுப்பப்படுவதைக் குறிப்பிட்டு இந்நேர்வினை ஒத்த விதித்தளர்வு பெற வேண்டிய பணியாளர்கள் வேறு எவரேனும் உள்ளனரா என்ற விவரத்தை உடன் அனுப்ப கோரப்பட்டுள்ளதால் வரும் 18.06.2க்குள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்தங்களது மாவட்டத்தில் முறையான பணியமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுபணிவரன்முறைப்படுத்தப்படாதவர்களின் விவரங்களை தற்போதைய நிலையில் நிலுவையாளவுள்ளவழக்கு கோப்புகளையும் ஆய்வு செய்து முழுமையான வடிவில் எப்பணியாளரது பெயரும் விடுபடாமலும் அவ்வாறு விதித்தளர்வு பெற வேண்டிய பணியாளர்கள் எவருமில்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதில் காலதாமதம் செய்யாமல் 18.08.21 க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்பது திட்டவட்டமாகத்தெரிவிக்கப்படுகிறது.
இதில் காலதாமதம் செய்யாமல் 18.08.21 க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்பது திட்டவட்டமாகத்தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.