Breaking

Tuesday, July 27, 2021

PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ செலவுகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் PF பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. PF பணம்
நாடு முழுவதும் கொரோனா பேரலை தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் PF வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சிறந்த சலுகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அளித்துள்ளது.

அதாவது PF பயனர்கள், கொரோனா சிகிச்சைக்காக இனி ரூ.1 லட்சம் வரை தங்களது PF கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த வகையில் நிதியுதவி பெற்றுக்கொள்ள PF வித்டிரா விதிமுறைகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வாடிக்கையாளர்கள் இனி மருத்துவச் செலவுகளுக்காக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொள்ள முடியும். தவிர மருத்துவ தேவைகளுக்கான பயனர் ஒருவர் பணம் எடுக்கும் போது அது தொடர்பான ஆவணங்களை ஆதாரமாக கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த சலுகை மூலம் பல ஆயிரக்கணக்கான PF வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய சலுகை மூலம் மருத்துவ தேவைகளுக்கான பணம் எடுத்தால் அது எதிர்காலத்தில் பின்னடைவை உருவாக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது வருங்காலத்துக்காக சேமித்து வைக்கும் பணத்தை இப்போது செலவழித்தால், வட்டி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்துமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog