தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாட்டு கூட்டத்தில் தமிழக முதல் முக ஸ்டாலின் அவர்கள், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் துவக்கவும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளைத் தோற்றுவிக்கவும் முயற்சிகள் எடுப்பதாக அறிவித்துள்ளார். முதல்வரின் உரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜூலை 27ம் தேதியான இன்று தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் துவக்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளைத் தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

அரசின் முக்கிய நோக்கம் புதிய வேலைவாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பதே ஆகும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நம் மாநிலத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் தற்போது 18 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில், 30 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு நாட்டுக் கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்புக் குறித்துத் திறன் பயிற்சி வழங்குதல், மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை உருவாக்குதல் ஆகியன குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews