எச்சரிக்கையுடன் இருங்கள்: " http" மற்றும் "https " என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன? - பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 11, 2021

Comments:0

எச்சரிக்கையுடன் இருங்கள்: " http" மற்றும் "https " என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன? - பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம்

" http" மற்றும் "https " என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?*

*🔰பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம்,*

*நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.*

*"http" என்பது "Hyper Text Transfer Protocol" என்பதைக் குறிக்கும்.*

*"s" என்பது இணைந்தால், "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும்.*

*இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே..*

*இது தங்கள் கணினியின் மொழிகளை*

*தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும்.* *இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.*

*எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,*

*இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!* *அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள்.*

*இதிலிருந்து நமது தகவல்கழை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.*

*இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!*

*இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.*

*எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும். (Eg: ".com" or ".org", ".co.in", ".net" etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.*

*.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.*

*இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.*

*இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும்.* *தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது;*

*ஆனால் ,*

*"icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல.*

*அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.*

*இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும்.*

*ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்.*

*எச்சரிக்கையுடன் இருங்கள்👍🏻*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews