பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் இன்று முதல் உயர் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேரடி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள மாநிலங்களில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்களை ஜூலை 12 முதல் செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கும், மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகளை நடத்துவதற்கும் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அனுமதி அளித்தார். செய்முறை மற்றும் நேரடி தேர்வுகள் விரைவில் நடக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள விடுதிகளை திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது.
இன்று முதல் பஞ்சாப் பள்ளிகளில் பயிலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கல்வித்துறை வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதல்களின் படியும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு வர இயலாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். வரவிருக்கும் வாரங்களில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்தால், மீதமுள்ள வகுப்புகள் ஆகஸ்ட் 2 முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்திலும் இன்று முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% வருகையுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மற்றும் 10 வகுப்புகளும் ஆகஸ்ட் 5 முதல் வாரத்திற்கு ஒரு முறையும், 11 மற்றும் 12 வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறையும் வகுப்புகள் நடக்கும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.