Breaking

Monday, July 26, 2021

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயது குறைப்பு? தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அரசு குறைக்க கூடாது என தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ந.ரெங்க ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஓய்வு வயது குறைப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இது அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்ய வாய்ப்பளிப்பதாக உள்ளது என இதற்கு அரசு பணியாளர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் வயது ஓய்வு பெறும் வயது அதிகரிப்பால் இளைஞர்களுக்கு அரசு பணிகள் கிடைப்பது கால தாமதமாகும் என பல்வேறு தரப்பினர் எதிர்த்தனர்.
இதனால் தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசாணையை ரத்து செய்வது குறித்து கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பிஎப் பணத்திற்கு பதிலாக பண பத்திரங்களை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அரசு குறைக்க கூடாது என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்க ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர், அரசின் இந்த முடிவால் தாமதமாக பணிக்கு சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் வயது குறைப்பால் குறைந்த பணி காலத்திலேயே ஓய்வடைந்து பாதிப்புக்குள்ளாவர்கள் என்று கூறினார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கல்வித்துறை தனி இயக்குனராக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஓய்வு கால பணபலனை ஆசிரியர்களுக்கு ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog