தமிழகத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கம் செய்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தமபாளைய மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளுக்கு எச்சரிக்கை :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இதனால் கற்றல்- கற்பித்தல் ஆன்லைன் முலமாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. ஆனாலும் பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லை இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதிலும் அரசு புதிய கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது இது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்த சொல்லி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வற்புறுத்த கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என உத்தமபாளைய மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கம் செய்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளை எச்சரித்துள்ளார். அதனை தொடர்ந்து 1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.