மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 15, 2021

Comments:0

மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கும் முக்கிய ஆவணமான ஆதார் அட்டையை மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


ஆதார் அட்டை:

ஆதார் அட்டை என்பது “டிஜிட்டல் இந்தியா” முயற்சியின் ஒரு பகுதியாகும், இது பல சேவை சலுகைகள், ஏராளமான சமூக நலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மானியங்களை பெறுவதற்கு முக்கிய ஆவணமாகும். UIDAI இணையதளம் மூலமாக ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு மொபைல் எண் கட்டாயமாகும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்யாத இந்திய குடிமக்கள் யுஐடிஏஐ இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வழக்கமாக, மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டையைப் பதிவிறக்குவது சாத்தியமில்லை என்ற தவறான கருத்து உள்ளது. மொபைல் எண் பதிவு செய்யாதவர்களுக்கு இந்த செயல்முறை எளிமையானது. ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களுக்கும் ஆதார் சேவைகள் கிடைக்கின்றன. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஆஃப்லைன் சேவை கிடைக்கும். ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய எளிய வழிமுறைகள்: படி 1: UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும்.

படி 2: முகப்புப் பக்கத்திலிருந்து ‘எனது ஆதார்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 3: ‘எனது ஆதார்’ என்பதன் கீழ் ‘ஆர்டர் ஆதார் மறுபதிப்பு’ விருப்பத்தைத் கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: உங்கள் 12 வது இலக்க ஆதார் எண் / தனித்துவமான அடையாள எண் / யுஐடி / 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் / விஐடியை வழங்க வேண்டும்.

படி 5: அடுத்து பாதுகாப்பு குறியீட்டை(password) நிரப்ப வேண்டும்.

படி 6: உங்கள் மொபைல் உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்படாவிட்டால், ‘எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ விருப்பத்தின் தேர்வு பெட்டியில் டிக் செய்ய வேண்டும். படி 7: இப்போது உங்கள் மாற்று எண்ணை உள்ளிடவும் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

படி 8: ‘OTP அனுப்பு’ option யை தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 9: ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனை’ தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 10: ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தவும், பின்னர் OTP அல்லது TOTP அங்கீகாரத்தை முடிக்க வேண்டும்.

படி 11: பின்னர் மறுபதிப்புக்கான கூடுதல் சரிபார்ப்புக்கு ‘’Preview Aadhaar Letter’’ கொண்ட ஒரு திரை இருக்கும்.

படி 12: ‘பணம் செலுத்துங்கள்’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

படி 13: கட்டணம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, டிஜிட்டல் வடிவத்தை PDF வடிவத்தைப் பதிவிறக்குமாறு கேட்கப்படும்.

படி 14: எஸ்எம்எஸ் மூலம் சேவை கோரிக்கை எண் உருவாக்கப்படும்

படி 15: ஆதார் கடிதம் அனுப்பப்படும் வரை உங்கள் எஸ்ஆர்என் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews