தமிழகத்தில் 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் – முதல்வர் நியமன ஆணை வழங்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 15, 2021

1 Comments

தமிழகத்தில் 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் – முதல்வர் நியமன ஆணை வழங்கல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை (ஜூலை 16) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் சரியாக நடத்த முடியாது என்பதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு ஆசிரியர்கள் தினசரி வருகை புரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும். இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நாளை (ஜூலை 16) நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு அனுப்பப்படும். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் 250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும், பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும், ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும் என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews