கல்வி உதவித்தொகை தேர்வு விண்ணப்ப பதிவு அறிவிப்பு – ஜூலை 25 கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 15, 2021

Comments:0

கல்வி உதவித்தொகை தேர்வு விண்ணப்ப பதிவு அறிவிப்பு – ஜூலை 25 கடைசி நாள்!

இந்தியாவில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தேர்வுவிற்கு ஜூலை 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு பி.எச்.டி. படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை:

இந்தியாவில் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் கல்வி உதவித்தொகைகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இவை ஏழை மாணவர்களின் படிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. கல்வி உதவித்தொகைகள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் கல்வி தொடர்பான தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு கற்றலை தொடருகின்றன. இந்தியாவில் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வாயிலாக கிஷார் வாக்யானிக் புரோட்சகான் யோஜனா எனும் அமைப்பின் மூலம் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பி.எச்.டி வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக 10ம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் 12 ம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.kvpy.iisc.ernet.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜூலை 25 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களின் கல்வி விவரங்கள், புகைப்படம், கையொப்பம், மற்றும் பிற சான்றுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். தேர்வு நவம்பர் 7ம் தேதி ஆன்லைனில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படும் என உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews