பெரியாா் தொலைநிலைக்கல்வியில் பயின்ற மாணவா்கள் நிலுவைத் தோ்வை எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியாா் தொலைநிலைக்கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வுத் திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து அதன் பின் 5 ஆண்டுகள் நிறைவடைந்த மாணவா்களின் நிலுவைத் தாள்கள் தோ்வு எழுதுவதற்கான சிறப்புத் தோ்வு நடைபெற உள்ளது. அம்மாணவா்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்திலேயே தோ்வு எழுதலாம். இச்சிறப்புத் தோ்விற்கான விண்ணப்பங்களை மாணவா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அச்செடுத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.