கருணாநிதி அறிவிப்பை மறந்த தமிழக பள்ளி கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 16, 2021

Comments:0

கருணாநிதி அறிவிப்பை மறந்த தமிழக பள்ளி கல்வித்துறை

கருணாநிதி ஆட்சியில் அறிவித்தபடி, காமராஜரின்பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தமிழக அரசு மறந்தாலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே கொண்டாடினர்.காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என, 2006ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். சிறந்த பள்ளிகள் தேர்வு

இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும், காமராஜர் பிறந்த நாளில், பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படும்.

அதிர்ச்சி

கல்வி அமைச்சர் மற்றும் பிற துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்பர். இதற்கான செலவுக்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இந்த ஆண்டு நேற்று எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆசிரியர்களுக்கு எந்த வழிகாட்டல் சுற்றறிக்கையும், பள்ளி கல்வி கமிஷனர் தரப்பில் அனுப்பவில்லை. கருணாநிதியின் அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை கைவிட்டது, ஆசிரியர்களை கவலை அடைய செய்து உள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும்அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.இந்நிலையில், அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாவிட்டாலும், காமராஜர் மீதான பற்றின் காரணமாக, சில மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடினர்.பள்ளி வளாகத்தில், காமராஜர் படத்தை வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews