தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வருட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்தேர்விற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள், இதில் தோல்வி அடைந்து விடுவதால் அவர்களின் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறைவேறாமலே போகிறது. இதனால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார். பின்னர் அமைச்சர் சுப்ரமணியன், மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர். இதற்கான விண்ணப்ப பதிவும் ஜூலை 16ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இதற்காக பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக தலைமை ஆசிரியரின் உதவியுடன் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை ஒன்றிணைத்து எவ்வித பிழையும் இன்றி, கடைசி தேதிக்குள் தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.