தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தினசரி கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான மொத்தம் 22 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.