கொரோனா 2 ஆம் அலை தாக்கம் நாடு முழுவதும் குறைந்து கொண்டே வரும் சூழலில் மாநிலங்கள் தோறும் பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த முடிவை, அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பாராத விதமாக உருவான கொரோனா பெருந்தொற்று நிமித்தமாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த நோய் தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறைந்து வந்ததையடுத்து, பள்ளிகளில் மேல்நிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்காக மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டுமாக தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக கல்வி நிறுவனங்களை மீண்டுமாக மூடக்கூடிய சூழல் உருவானது.
அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் தொடர்ந்து சரிந்து வருவதால், பள்ளிகளை மீண்டுமாக திறக்கும் முயற்சியில் பல மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டால் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் இது தொடர்பாக முடிவு செய்வது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்தும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை பற்றியும் மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் வலியுறுத்தியுள்ளார். தவிர மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்துவதின் முடிவை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.