உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி....? உழவர் பாதுகாப்பு அட்டையினால் என்னென்ன பயன்கள்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி....? உழவர் பாதுகாப்பு அட்டையினால் என்னென்ன பயன்கள்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி....?

*🔰தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு அட்டை எப்படி வாங்குவது, உழவர் பாதுகாப்பு அட்டையினால் என்னென்ன பயன்கள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுவோம்.*

*🔰இந்த உழவர் அட்டை திட்டமானது 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கப்பட்டது.*

*🔰உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைக்கின்றன. சிலர் இந்த வாய்ப்பினை தவறவிட்டு விடுகிறார்கள்.*

*🔰அனைவரும் இந்த உழவர் அட்டை பெற்று பயன் பெறலாம்*

*🔴உழவர் அட்டையின் நிதி உதவிகள்:*
*⭕திருமண உதவித்தொகை:*

*திருமணத்திற்காக நிதி உதவியினை இந்த உழவர் அட்டையின் மூலம் பெறலாம். ஆணாக இருந்தால் ரூ.8,000/- தொகையும், பெண்ணாக இருந்தால் ரூ.10,000/- தொகையை பெறலாம்.* *⭕முதியோர் நிதி உதவி:*
*அறுபது வயதை கடந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் ஓய்வுதியம் பெறலாம். மாதம் மாதம் இவருக்களுக்கு 1000 ரூபாய் முதியோர் நிதி உதவி வழங்கப்படுகிறது.*

*⭕விபத்துக்கான நிதி உதவி:*
*ஏதேனும் விபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கான நிதி உதவி, இயற்கை மரணம் அடைந்தால் அதற்கான பணமும், இறுதி சடங்கு செய்வதற்கான தொகையும் வழங்கப்படும்.*
*டிபி, HIV, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படும்.*
*இறப்பு, விபத்தினால் கை/ கால் இழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் பணமும், முடக்குவாதம் ஏற்பட்டால் நிதி உதவியாக ரூ.50,000/- வழங்கப்படும்.* *🔴உழவர் அட்டை வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பயன்:*

*⭕திருமணத்திற்காக நிதி உதவி, கல்வி நிதி உதவி, அவர்கள் தனி நபராக ஆகும்போது அதற்கான நிதி உதவி, அவர்களுக்கான இறுதி சடங்கு நிதி உதவி வழங்கப்படும்.*

*⭕உறுப்பினர் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.20,000/- தொகை வழங்கப்படுகிறது.*

*⭕இறுதி சடங்கிற்கு ரூ.2500/- வழங்கப்படுகிறது.*

*⭕கல்வி நிதி உதவி தொகையானது அவர்களுடைய கல்வி நிலையை பொறுத்து வழங்கப்படும்.*

*🔴உழவர் திட்டத்தின் பயனாளிகள்:*
*⭕இந்த உழவர் திட்டத்தில் பயிர் வளர்ப்பு செய்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்பது இல்லை.*
*⭕தோட்டக்கலை வைத்திருப்பவர்கள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு செய்பவர்களும் இந்த உழவர் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.*

*🔴உழவர் திட்டத்தில் எப்படி இணைவது?*
*⭕இந்த உழவர் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.*
*⭕சிறு மற்றும் குறு விவசாயிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.*
*⭕விண்ணப்பதாரர்கள் ஈரநிலம் வைத்திருந்தால் 2.5 ஏக்கர் அளவிற்கு வைத்திருக்க வேண்டும். காய்ந்த நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.*

*⭕கூலி வேலை செய்யும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.*
*⭕மீன்பிடி மற்றும் தோட்ட வேலை செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.* *🔴உழவர் திட்டத்தின் பயனாளி மற்றும் சார்ந்து இருப்பவர்கள்:*
*⭕பயனாளியின் கணவன் அல்லது மனைவி.*
*⭕உறுப்பினரின் குழந்தை அல்லது பெற்றோர்*
*⭕உறுப்பினரின் இறந்து போன மகனின் மனைவி மற்றும் குழந்தைகள் (இவர்கள் தான் பயனாளியின் சார்ந்து இருப்பவர்கள் லிஸ்டில் வருவார்கள்)*

*🔴உழவர் திட்டத்தில் எப்படி பதிவு செய்வது?*

*⭕ஸ்டேப் 1: முதலில் கூகுளில் esevai என்று டைப் செய்யவும்.*

*⭕ஸ்டேப் 2: இதற்கு முன் உங்களிடம் User ID SINGUPசெய்திருந்தால் அதனையே பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் யூசர் ஐடி கிரியேட் செய்யாமல் இருந்திருந்தால் Citizen login என்பதை க்ளிக் செய்யுங்கள், பின் New User? SignUp here என்பதை கிளிக் செய்து யூசர் ஐடி கிரியேட் செய்து கொள்ளுங்கள்.*

*⭕ஸ்டேப் 3: அவற்றில் கேட்டுள்ள அனைத்திற்கும் சரியானவற்றை நிரப்ப வேண்டும். இறுதியாக Captcha எண்ணை சரியாக கொடுத்து sign in செய்யவும்.*

*⭕ஸ்டேப் 4: உங்களுடைய மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அவற்றை கொடுத்து என்டர் செய்யவும்.*

*⭕ஸ்டேப் 5: லாகின் செய்த பிறகு services என்பதில் Department-ல் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.*

*⭕ஸ்டேப் 6: அடுத்து Search ஆப்ஷனில் Small Marginal Farmer Certificate என்பதை தேர்வு செய்யவும்.*

*⭕ஸ்டேப் 7: can Number வைத்திருப்பவர்கள் அவற்றை கொடுக்கலாம். இல்லாதவர்கள் புதிதாக can Number ரெஜிஸ்டர் செய்யவும்.*

*⭕ஸ்டேப் 8: அடுத்ததாக 3 Douments அப்லோட் செய்யவும். போட்டோ, சிட்டா, சுய விருப்பு கடிதம் இணைக்கவும். போட்டோ (50 kb-க்குள் இருக்க வேண்டும்)*

*⭕ஸ்டேப் 9: 3 Douments அப்லோட் செய்த பிறகு உழவர் அட்டைக்காக ரூ.60/- செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ளலாம்.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews