அண்ணாமலை பல்கலையில் தகுதியற்ற பேராசிரியர்கள் நீக்கம் – அமைச்சர் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

அண்ணாமலை பல்கலையில் தகுதியற்ற பேராசிரியர்கள் நீக்கம் – அமைச்சர் விளக்கம்!

சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புதிய பேராசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த முழு விவரத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசியர்கள் நியமனம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என கடந்த ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 23) ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர், கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர், மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில், புதிய பணிகளை தொடங்கி வைத்தும், முடிக்கப்பட்ட பணிகளை திறந்தும் வைத்தனர். அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த ஆட்சியின் போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என ஒன்று இன்னும் செயல்படவில்லை. விழுப்புரத்தின் வளர்ச்சிக்கு திமுக காரணமாக உள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் குரல் கொடுத்துள்ளார். உயர்கல்வியின் வளர்ச்சியை கருதியே இது செய்யப்பட்டுள்ளதே தவிர பெயருக்காக செய்யப்பட்டது அல்ல என தெரிவித்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை சரி செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பல்கலைக்கழகம் வந்தால் எந்த குற்றச்சாட்டும் வராத அளவு அரசு செயல்படும். மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பணியாற்றி வரும் பேராசிரியர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கவுரவப் பேராசியர்களை நியமிக்க கமிட்டி போடப்பட்டதே தவிர, டிஆர்பியோ, டிஎன்பிஎஸ்சி மூலமாக நியமனம் செய்யப்படவில்லை. எனவே பேராசிரியர் பணியிடங்களுக்கான நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews