விரைவில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது சிலம்பம் சுற்றி அசத்திய 2 மாணவிகளை அமைச்சர் பாராட்டினார். அப் போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதன்படி அனைத்து பள் ளிகளையும் ஆய்வு செய்து வருகிறேன். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிகளில் பணிநிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை. முதல்வரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும்.
கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.6,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் இருக்கிறது. கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாமல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயன்பாடின்றி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.