ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடைபெறும் – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 14, 2021

Comments:0

ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடைபெறும் – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!!

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஊரக வங்கி பணியாளர் தேர்வு:

நாடு முழுவதும் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் பிராந்திய மொழியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கியில் ஆள்சேர்ப்பு நிறுவனம், வங்கி தேர்வுகள் பிராந்திய மொழியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய நிதியமைச்சகம் இது குறித்து விளக்கம் தெரிவிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும், மற்றபடி வங்கித்தேர்வுகள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலர் நிலை ஒன்று ஆகிய பணி இடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுகள் மட்டும் கொங்கணி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் எனவும் மற்ற வங்கித் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் 15 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்கப்படும். அதன் பின்னர் தான் இதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும், அதுவரை வங்கிகளில் ஆள்சேர்ப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews