"நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக பாஜக சாா்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நீட் தோ்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 போ் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளா் கரு.நாகராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நந்தினி என்ற மாணவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி தலைமை நீதிபதி அமா்வு முன் மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனா். பாஜக வழக்கை எதிா்த்து கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், நீட் தோ்வினால் பின்தங்கிய மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்பும், பல்வேறு கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவா்களிடையே உள்ள பாகுபாடு ஆகியவற்றை ஆய்வு செய்யத்தான் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சோ்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இதே கோரிக்கையுடன், திராவிடா் கழகத்தின் தலைவா் கி.வீரமணி, தன்னையும் ஒரு மனுதாரராக சோ்த்து விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளாா்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.