Breaking

Tuesday, July 27, 2021

தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிந்த பின்னர் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

கல்லூரி திறப்பு:

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் கொரோனா தொற்றின் பரவல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு தேர்வுகள் நடந்தது. தற்போது 2021ம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் 2 ம் அலை அதிக அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. இடையில் பாதிப்புகள் குறைந்த போது ஆராய்ச்சி படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்தது. அதன்பின்னர் அந்த வகுப்புகளும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 2020-2021 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலை வகுப்பு மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், நேற்று முதல் அரசின் அனைத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்திய அரசிலயமைப்பு சட்டத்தில் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பாடப் புத்தகங்களிலும் ‘ஒன்றிய அரசு’ என்று தான் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog