அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்தவுடன் கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறினார். பிஎட் படிப்பிற்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பேராசியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
4 பேரை நியமித்தால் அது பல்கலைக்கழகமா? என்று கேட்ட அவரிடம் உயர்கல்வித்துறையில் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதுபற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.