தமிழக அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தினை செயல்படுத்திட தோற்றுவிக்கப்பட்ட 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்பட்ட 58 பணியிடங்களுக்கு மட்டும் ஜூலை 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் குறித்த அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் தர ஊதியம் ரூ.4,600/- என்ற ஊதிய விகிதத்தில், 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவித்தும், இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட வேண்டும் எனவும் இப்பணியிடங்களுக்கான செலவினத் தொகை முழுமையும் அனைவருக்கும் மத்திய அரசிடம் பெற நடவடிக்கை எடுக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தினை செயல்படுத்திட தோற்றுவிக்கப்பட்ட 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், நிரப்பப்பட்டுள்ள 58 பணியிடங்களுக்கு மட்டும் 01.04.2018 முதல் 31.03.2021 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் நிரப்பப்பட்டுள்ள 58 தற்காலிக பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், தற்பொழுது, இப்பணியிடங்களுக்கு, ஜூலை 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை வழங்குமாறு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்காலிக பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 1.03.2024 வரை மேலும் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தின் இணைப்பில் கண்டுள்ள பணியிடங்களுக்கு ஜூலை 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜூலை 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.