வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சரவை முடிவு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

1 Comments

வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சரவை முடிவு..!

வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சரவை முடிவு..!

வரும் ஒன்றாம் தேதியிலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தரகண்ட் மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டது. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய - மாநில அரசுகள் தயக்கம் காட்டி வந்தன. பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உத்தரகண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வரும் 1ம் தேதியிலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பீகார், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. blogger_logo_round_35

    பள்ளிகள் திறப்பு அமைச்சரவை முடிவு என்ற தலைப்பில் உத்தரகண்ட் என்ற சொல் வரவே இல்லை...நமக்கும் அதற்கும் Breaking news என்று சொல்லும் அளவிற்கு சம்பந்தம் இல்லை... ஏன் எப்போதும் மக்களை பரபரப்பாகவே வைத்துக் கொள்ள நினைக்கிறீர்கள்? இது ஆரோக்கியமான தலைப்பாக கண்டிப்பாக இல்லை... உத்தரகண்ட் பள்ளிகள் திறப்பு என ஏன் தலைப்பு இருக்க கூடாது...

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626945