ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 29, 2021

Comments:0

ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் மாநில வாரியான விழாக்கள் காரணமாக வங்கி 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வழக்கமான வார இறுதி விடுமுறை 7 நாட்களும் சேர்ந்து மொத்தம் 15 நாட்கள் வங்கி விடுமுறை நாட்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி விடுமுறை:
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, நீங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, வங்கிகள் மதம் சார்ந்த பண்டிகை மற்றும் அரசு விடுமுறை என்று 8 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.

நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும். மேலும், வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றது. விடுமுறை நாட்களின் பட்டியல்:
ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம்
ஆகஸ்ட் 16: பார்ஸ் புத்தாண்டு (பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கி விடுமுறை)
ஆகஸ்ட் 19: முஹர்ரம் (அசூரா) ( அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, மற்றும் ஸ்ரீநகர்)
ஆகஸ்ட் 20: முஹர்ரம் / முதல் ஓணம்
ஆகஸ்ட் 21: திருவனம்
ஆகஸ்ட் 23: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி
ஆகஸ்ட் 30: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வாட் -8) / கிருஷ்ண ஜெயந்தி:
ஆகஸ்ட் 31: ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி வழக்கமான வார விடுமுறைகள்:
ஆகஸ்ட் 1: ஞாயிறு
ஆகஸ்ட் 8: ஞாயிறு
ஆகஸ்ட் 14: இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15: ஞாயிறு
ஆகஸ்ட் 22: ஞாயிறு
ஆகஸ்ட் 28: நான்காவது சனி
ஆகஸ்ட் 29: ஞாயிறு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews