கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நேற்று (ஜூலை 22) வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இந்த மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றுடன் (ஜூலை 22) முடிவடைந்துள்ள SSLC தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று கர்நாடக முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் SSLC தேர்வுக்கு பதிவு செய்த 99.6% மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மாநில முதல்வர் எடியூரப்பா, ‘தொற்று நோய்க்கு மத்தியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த, கடுமையாக உழைத்த அமைச்சரவை ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் 99.6% வருகையுடன், அதாவது 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதியுள்ளனர். அம்மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்விட்டர் பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த SSLC தேர்வுகளில் மாணவர்கள் இரண்டு ஒருங்கிணைந்த தாள்கள் அடங்கிய மல்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன் படி கடந்த திங்கள் கிழமை முக்கிய பாடங்களும், நேற்று (ஜூலை 22) மொழிதேர்வும் நடத்தப்பட்டது. கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட 98.41% மாணவர்களை விட இந்த ஆண்டு 8,19,694 பேர் என்ற அடிப்படையில் 99.62% பேர் முதல் மொழி தேர்வுகளை எழுதியுள்ளனர். இதற்கிடையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழி பாடங்கள் முறையே 99.60% மற்றும் 99.62% பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.