WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இரண்டு புதிய அம்சம் வெளியீடு!
வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட் அதன் பயனர்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது வரவிருக்கும் புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப் புதிய அம்சம்
சிறந்த தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ் அப், அதன் பயனர்களுக்கு 2 புதிய அம்சங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியின் பீட்டா பயனர்கள் மட்டுமே இந்த புதிய அம்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வரும் நாட்களில் அனைத்து Android தொலைபேசி பயனர்களுக்கும் இது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி வாட்ஸ் அப் புதிய புதுப்பிப்பு மூலம், ஒருவர் தகவல் பரிமாற்றத்தின் போது ஸ்டிக்கர்களை அனுப்ப முடியும். இந்த ஸ்டிக்கர்கள் வாட்ஸ் அப் செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும். மற்றொரு புதிய அம்சத்தின் படி, வாட்ஸ் அப் செயலி தனது வாய்ஸ் நோட்டை மறுவடிவமைப்பு செய்துள்ளது. WABetaInfo இன் அறிக்கையின்படி, வாய்ஸ் நோட் இயக்கப்படும் போது, அவை நேர் கோடாக இருக்காமல் அவை அலை வடிவத்தை பெற்றிருக்கும். நீங்கள் ஏற்கனவே ஒரு வாட்ஸ் அப் பீட்டா பயனராக இருந்தால், இந்த இரண்டு அம்சங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் பயனர்கள் இந்த வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவைகளை ஏற்கனேவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வாட்ஸ் அப்பின் புதிய அம்சம் இயக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க, ஒருவர் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் பேக்கை திறந்து அவற்றில் உள்ள ஸ்டிக்கர்களை தேர்ந்தெடுக்கலாம். பின்பு ஸ்டிக்கர் பேக்கின் மேலே ஒரு முன்னோக்கி செல்லும் ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அவை இருந்தால் உங்கள் வாட்ஸ் அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என அர்த்தமாகும். இதனை பயன்படுத்தி வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது செய்திகளில் ஸ்டிக்கர் பேக்குகளை உபயோகித்து கொள்ள முடியும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.