Google Pay-ல் UPI PIN மறந்து விட்டால் புதிதாக மாற்றம் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 29, 2021

Comments:0

Google Pay-ல் UPI PIN மறந்து விட்டால் புதிதாக மாற்றம் செய்வது எப்படி?

மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தும் Google Pay-ல் UPI மறந்துவிட்டால் அதனை 5 நிமிடங்களில் எளிமையாக மாற்றம் செய்வது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Google Pay UPI:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாகியுள்ளது. மேலும் தள்ளுவண்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைவரும் Google Pay மூலம் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். இதனால் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் பயன்பாடுகளும் மக்களிடம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இந்த செயலி மூலமாக ஷாப்பிங், இபி பில், மொபைல் ரீசார்ஜ் ஆகியவை செலுத்தலாம். மேலும் இந்த ஆப் மூலமாக கட்டணம் செலுத்தினால் பல ஆபர்கள் வழங்கப்படுகிறது. இதனால் அதிகம் பேர் இதனை பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் முறை எளிமையானது பிளே ஸ்டோரில் Google Pay ஆப்யை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Google Pay வினை மொபைலில் ஆக்டிவ் செய்து , பயனர்களின் UPI, மொபைல் எண், கணக்கு எண் மற்றும் QR code யை பயன்படுத்தியும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
அதன் பின்னர் இந்த செயலியை பயன்படுத்தும் போது UPI PIN ஐ மறந்து விட்டால் அல்லது UPI PIN ஐ Reset செய்ய வேண்டும். நாம் Payment App ல் ஒவ்வொரு முறையும் புதிய கட்டண கணக்கினைச் சேர்க்கும் போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் போது நாம் உள்ளே செல்வதற்காக பயன்படுத்தும் எண்ணே UPI PIN ஆகும். Google Pay இல் UPI PIN ஐ மாற்றுவதற்கான வழிமுறைகள்:
முதலில் Google Pay appயை open செய்ய வேண்டும்.
பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்களது புகைப்படத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து வரும் பக்கத்தில் உள்ள வங்கி கணக்கிற்குள் நுழைந்து நீங்கள் UPI PIN திருத்தம் செய்ய இருக்கும் வங்கி கணக்கினை தேர்ந்தெடுக்கவும்.
வங்கி கணக்கின் மீது பல முறை கிளிக் செய்யும் பொழுது, UPI PIN ஐ மாற்றவும் என தெரிவிக்க வேண்டும்.
பின்னர் உங்களது டெபிட் கார்டு எண்ணை பயன்படுத்தி OTP வாயிலாக புதிய UPI PIN ஐ உருவாக்க வேண்டும்.
மீண்டும் புதிய UPI PIN ஐ பயன்படுத்தி பணபரிவர்த்தனை உள்ளீட்டிற்கு சென்று பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews