அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மாவட்டம் வாரியாக, பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, பள்ளிகளின் வெளியே, பொதுமக்களுக்கு தெரியும் வகையில், விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியல்மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப, அரசு பள்ளி களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்; உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நிதி பற்றாக்குறை உள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீட்டை, அரசால் அதிகரிக்க முடியாத சூழல் உள்ளது. இதை சமாளிக்க, மாவட்டம் வாரியாக, தனித்தனியே பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தலாம் என, அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, பள்ளி சீரமைப்பு மாநாடு அறிமுகமாகி, பெரிதாக வெற்றி பெற்றது. அதை மீண்டும் தொடர திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த மாநாட்டுக்காக, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளின் உள் கட்டமைப்பு தேவைகளை, தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் இணைந்த குழு பட்டியலாக தயாரிக்கும்.பின், மாவட்ட அளவிலான தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள், இந்நாள் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உதவிகள் பெறப்படும். இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்படும். அதில், நன்கொடை யாளர்கள் மற்றும் பள்ளிக்கான சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர். நிதியுதவிஇந்த திட்டம், அரசின் எந்த நிதியுதவியும் இன்றி, பொதுமக்களின் முழு பங்களிப்புடன், அந்தந்த ஊர் அரசு பள்ளிகள் பொலிவு பெறுவதற்கானது. எந்த முறைகேடுக்கும் இடமின்றி, நேரடியாக நன்கொடையாளர்களால் நிதியானது செலவிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

While poor people are suffering even for food after losing their jobs, undeserved government Staffs especially teachers are filling their belly with lakhs of money as salary for the work they don't do. Reduce 50% of their salary and use it for improving school infrastructures.
ReplyDelete