தமிழகத்தில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தமிழகத்தில் புதிதாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை:
தமிழகத்தில் கடந்த 1 வருட காலத்திற்கு மேலாக கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றனர். இதனால் சுமார் ஒரு வருட காலமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களை மேலும் வேதனை அடைய செய்யும் வகையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை என்னும் நோய் உருவெடுத்து மக்களை தொடர்ந்து பாதிக்க தொடங்கியது. தமிழகத்தில் தற்போது வரை சுமார் 900 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மத்தியில் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து மக்களை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சகம் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி ஆம்போடெரிசின் பி டியோக்சிகோலெட், லிபோஸோமல், ஆம்போடேரிசின் பி போன்ற மருந்துகளுடன் பொசகோனசோல், இஸவுகோனசோல் ஆகிய மருந்துகளை கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக் கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல், இஸவுகோனசோல் மருந்துகளைப் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கண் எரிச்சல், பல் வலி, தலைவலி இருந்தால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews