'பயாலஜிக்கல் - இ' நிறுவனத்தின், 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியின் ஒரு டோஸ், 250 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி விற்கப்பட்டால், மிக குறைந்த விலையுடைய தடுப்பூசியாக இது இருக்கும்.
250 ரூபாய்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும், பயாலஜிக்கல் - இ நிறுவனம், கொரோனாவுக்கான கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து, 30 கோடி டோஸ்களை வாங்க, சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், இந்த தடுப்பூசி விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸை, 250 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இரண்டு டோஸ்களின் விலை, 400 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி விற்கப்பட்டால், மிக குறைந்த விலையுடைய தடுப்பூசியாக, கோர்பேவாக்ஸ் இருக்கும். விலை நிர்ணயம்
கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ், மாநில அரசுகளுக்கு, 300 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு, 600 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ், மாநில அரசுகளுக்கு, 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு, 1,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன.'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு, 995 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.