மத்திய அரசு சார்பில் கைம்பெண்களுக்கான நிதியுதவி திட்டம் – தேவைப்படும் ஆவணங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

மத்திய அரசு சார்பில் கைம்பெண்களுக்கான நிதியுதவி திட்டம் – தேவைப்படும் ஆவணங்கள்!

இந்தியாவில் கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு பொருளாதார தேவையை பூர்த்தி அடைய செய்யும் வகையில் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது அதனை யார் பெறலாம் என்றும் அதற்கு என்னென்ன சான்றுகள் தேவை என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

கைமைப்பெண் உதவி தொகை:
மத்திய அரசு நாட்டில் உள்ள பெண்கள் பயனடையும் வகையில் பல்வேறு உதவி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தன் கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. கைம்பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் பொருளாதார தேவையை பூர்த்தி அடைய செய்யும் வகையிலும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கணவனை இழந்த 18 முதல் 60 வயது பெண்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலும், குழந்தைகள் அவரை கவனித்து கொள்ளும் வயது வராத தாய்மார்களும் அரசின் இந்த நிதியுதவியை பெற முடியும். இந்த தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்றும் இந்த தொகையை அவர்களின் குழந்தைகளோ அல்லது இதர குடும்பத்தாரோ பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற அடையாள அட்டை, கணவரின் இறப்பு சான்றிதழ், முகவரிக்கான அடையாள அட்டை, வருமான வரிச்சான்று, வயது சான்று, மொபைல் நம்பர், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். இதை சமர்ப்பித்த பின் அரசு மாதந்தோறும் உங்கள் வங்கி கணக்கில் தொகையை வரவு செய்து வரும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews