அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நேற்று துவங்கின. பிளஸ் 1 வரையில், அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த, பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதனால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளன. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கை:பள்ளிகளின் கல்வி ஆண்டு நிர்வாக பணிகளுக்கு, தலைமை ஆசிரியரின் உதவிக்கு, ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியே, முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.